இன்று யாழ் வந்த பிரபல தென்னிந்திய பாடகர்கள்
தென்னிந்தியாவின் பிரபல பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன் அநுராதாஸ்ரீராம் உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இன்று (30) பிரபல பின்னணி பாடகர்களான உன்னிகிருஷ்ணன், அநுராதாஸ்ரீராம் மற்றும் ஸ்ரீநிஷா உள்ளிட்டோருடனான இசைகுழுவினர் வந்திறங்கியுள்ளனர்.

இசை நிகழ்ச்சி
இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது.

யாழில் இடம்பெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றிற்காக இவர்கள் வருகை தந்துள்ளனர்.

நாட்டிற்கு வந்த பின்னணி பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், நம் நாட்டின் கலாசாரம், விருந்துபச்சாரம் மற்றும் தமிழ் மக்கள் தொடர்பிலும் நெகிழ்ச்சியான கருத்துகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடதக்கது.