வேண்டிய வரங்கள் கிடைக்கும் தைப்பூச விரதம்; முருகபெருமானை இப்படி வழிபடுங்கள்!

Festival Hinduism Murugan
By Sulokshi Jan 30, 2026 01:19 PM GMT
Report

முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம். தை மாத பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு பிப்ரவரி 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட உள்ளது தைப்பூச விரதம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் மிகப் பெரிய விழா ஆகும்.

வேண்டிய வரங்கள் கிடைக்கும் தைப்பூச விரதம்; முருகபெருமானை இப்படி வழிபடுங்கள்! | The Thaipusam Fast Grants Desired Boons

முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் மிகப் பெரிய விழா

உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பல இடங்களிலும் விழா எடுத்தும் கொண்டாடுவது வழக்கம். கோடிக்கான பக்தர்கள் இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.

முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கிய தினத்தையே நாம் தைப்பூச பெருவிழாவாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் அன்று முருகனை மனதார வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

வேண்டிய வரங்கள் கிடைக்கும் தைப்பூச விரதம்; முருகபெருமானை இப்படி வழிபடுங்கள்! | The Thaipusam Fast Grants Desired Boons

தைப்பூச விரதம் இருக்கும் முறைகள்

தைப்பூசம் அன்று நாள் முழுவதும் உணவை தவிர்த்து உபவாசமாக விரதம் இருக்கலாம். முழு உபவாசமாக இருக்க முடியாதவர்கள் உப்பு சேர்க்காத எளிய உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

அல்லது பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு தைப்பூச விரதம் இருக்கலாம். பால் குடமாகவோ அல்லது பால் காவடியாகவோ எடுத்துச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம்.

முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட காவடிகள் சுமந்து சென்று வழிபடலாம். அப்படி காவடி எடுப்பவர்கள் குறைந்தபட்சம் 5 நாட்களாவது விரதம் இருப்பது நல்லது.

வேண்டிய வரங்கள் கிடைக்கும் தைப்பூச விரதம்; முருகபெருமானை இப்படி வழிபடுங்கள்! | The Thaipusam Fast Grants Desired Boons

தைப்பூசம் அன்று அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக் கொள்ளலாம். இது எதுவும் முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே விரதம் இருக்கலாம்.

அன்றைய தினம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து முருக நாமங்களை மட்டுமே ஜபித்த படி, தியானம் செய்யலாம். தைப்பூச விரதம் எத்தனை நாட்கள் இருந்தாலும் விரத காலத்தில் உடல் மற்றும் மன கட்டுப்பாடு கடைபிடிப்பது அவசியம்.

மாலை அணிந்து, விரதம் இருந்து, முருகனின் திருநாமங்களை சொல்லியபடி, முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சொன்றும் தைப்பூச வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

மது, மாமிசம், புகை போன்ற தீய பழக்கங்களை தவிர்த்து, முருகனை மனதார வேண்டி, பூஜை செய்தும் தைப்பூச விரதத்தையும், வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.

இது எதுவும் முடியாதவர்கள், கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருக்கலாம். வீட்டில் வேல் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.

அப்படி இல்லாதவர்கள், முருகன் படத்திற்கு பூப்போட்டு, எளிமையான நைவேத்தியம் படைத்து வழிபட்டு விரதத்தை துவக்கலாம்.

மாலையில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி, உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை சொல்லி, முருகனுக்கு ஏதாவது நைவேத்தியம் படைத்து, வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

இவற்றில் அவரவருக்கு முடிந்த எளிமையான முறையில் விரதம் இருந்து, முருகனை வழிபட்டு, முருகப் பெருமானின் திருவருளை முழுவதுமாக பெற முடியும்.  

மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US