பிரபல பின்னணி பாடகர் கே.கே திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்
பிரபல பின்னணி பாடகர் கே.கே என்கின்ற கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தமிழ், இந்தி உட்பட பல்வேறு முக்கிய மொழித் திரைப்படங்களில் பல நூறு பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் அவர், காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே, அந்நியன் படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தின் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர் பாடிய பல பாடல்களில் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விரைவில் வெளிவரவுள்ள லெஜண்ட் திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.
அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவிலுள்ள சி.எம்.ஆர்.ஐ வைத்தியசாலையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய திடீர் மறைவுக்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 31, 2022
அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவரது மறைவு குறித்த பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவில், ‘கே.கேவின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கே.கே மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
KK was a very talented and versatile singer. His untimely demise is very saddening and a huge loss to Indian music. With his gifted voice, he has left an indelible impression on the minds of countless music lovers. My deepest condolences to his family and fans. Om Shanti Shanti
— Amit Shah (@AmitShah) May 31, 2022
அவருடைய பாடல்கள் மூலம் அவரை நினைவு கொள்வோம். அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பாடகி சிம்மியி கே.கே மறைவுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
There is no way to make sense of this. What a terrible couple of days for music.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 31, 2022
His song rings true now and how.
Rest in Peace, KK.