யுத்த பாதிப்பிலிருந்து விலகாத குடும்பத்தின் இன்றைய நிலை(Video)
உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம் மக்கள் இன்னும் அந்த அவல நிலையில் இருந்து மீளாது துயரத்தில் ஆழ்ந்துள்ள பலர் இன்னும் எமது மண்ணில் வாழ்துகொண்டிருக்கின்றனர்.
பலருக்கும் தெரியாத அவர்களின் துன்பங்கள் துயர சம்பவங்களை புலம் பெயர் எம் மக்களுக்கு எடுத்துக்கூறுகின்றது உறவுப்பாலம் நிகழ்ச்சி. வாழ்வில் எல்லோருக்கும் ஏதோ ஓர் கஸ்டம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் ஏதோரு ஒரு கட்டத்தில் அந்த துன்பங்கள் துயரங்கள் என்பன நம்மைவிட்டு சென்றுவிடும் எனும் நம்பிக்கையில் தான் எல்லோர் வாழ்க்கையும் நகர்ந்துகொண்டிருக்கின்றது.
யுத்தத்தில் இறுதியில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்ட எம் மக்கள் , போரினால் ஏற்பட்ட பல்வேறு இழப்புக்களை கண்ணீருடன் எதிர்கொண்டுள்ளனர்.
பூநகரியில் போர் முடிந்து 14 ஆண்டுகள் கடந்தபோதும் அதன் வடுக்களால் , கணவர் மற்றும் மகளை பறிகொடுத்து, இரு பிள்ளைகளுடன் வாழும் தாயின் சோகத்தினை எடுத்துக்கூறுகின்றது இக்காணொளி.