மனைவி பிள்ளைகளின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி!
குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினால் மனைவி பிள்ளைகள் தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பாரதி வீதியினைச் 43 வயதுடைய சேர்ந்த கணேஷ் யோகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் மனைவி பிள்ளைகளுக்கும் இடையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராற்றினால் மனைவி பிள்ளைகள் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் க.ஜீவராணி சம்பவ இடத்தினை பார்வையிட்ட பின்னர், உயிரிழந்தவரின் பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கைதான மனைவி ம் மற்றும் 23 வயதான மகன் ஆகியோர் சிகிற்சைகாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,15 மற்றும் 17 வயதான பெண் பிள்ளைகள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை உயிரிழந்த நபர் ஏற்கனவே அண்மையில் உறவினர்களால் தாக்கப்பட்டிருந்த நிலையில் கையில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.