பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்
இந்தியாவின் பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவால் இன்று (அக். 25) காலமானார்.
கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று சந்த சமையல் கலைஞர் தாமு, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கின்னஸ் உலகச் சாதனை
செஃப் தாமு (Chef Damu), தனது 72ஆவது வயதில் இன்று (ஒக்டோபர் 25) காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், சமையல் கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
செஃப் தாமு எனப் பிரபலமாக அறியப்படும் கே. தாமோதரன், இந்தியாவின் பிரபல சமையல் கலை நிபுணரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர்.
பல்வேறு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களிடையே பிரபலமானார்.
2010ஆம் ஆண்டு, தொடர்ந்து 24 மணித்தியாலங்கள், 30 நிமிடங்கள், 12 விநாடிகள் சமையல் செய்து, 617 உணவு வகைகளைத் தயாரித்ததன் மூலம் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
சமையல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கிக் கௌரவித்தது