வர்த்தக நிலையத்தில் கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்
வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தகராறில் 43 வயதான இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தியால் கத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்வம் புத்தளம் குதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அருகில் உள்ள கடையொன்றுக்குச் சென்றிருந்த போது, கடையின் உரிமையாளருடன் இரு நபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சென்றிருந்த இவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வில்லிவத்த பகுதியை சேர்ந்த 43 வயதான குடும்பஸ்த்தர் என பொலிஸார் தொிவித்துள்ளனர்.