தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு கோழிக்கடையில் நடந்த அசம்பாவிதம் ; பறிபோன உயிர்
தனது கோழிக் கடையைச் சுத்தம் செய்யும்போது மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் நேற்றுமுன்தினம் (21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரண விசாரணை
மின்சாரம் தாக்கிய நிலையில் அயலவர்களால் உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மாலை வேளையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.