கல்முனை பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய 3 பிள்ளையின் தந்தையான செல்லத்துரை கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த நபர் சம்பவ தினமான இன்று அதிகாலை 4.00 மணியளவில் தனது வீட்டில் இருந்து மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து வாவி ஊடாக கல்முனை நற்பட்டிமுனைக்கு மாடுகளை சாய்த்து சென்ற நிலையில் கல்முனை துரைவந்தியமேடு ஆற்றுக்கு அருகில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.