ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த புலத்சிட்டி புகையிரதத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தத் தகவலை வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஊடகங்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
புனானை ரயில் நிலையத்துக்கும் வாழைச்சேனை ரயில் நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ள ஓட்டமாடி பாலத்துக்கு அருகில் நேற்றிரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகம்மதியா வீதி, செம்மண்ஓடை, வாழைச்சேனை எனும் முகவரியில் வசிக்கும் செய்னுலாப்தீன் இக்பால் கலால்தீன் (வயது – 39) என்ற குடும்பஸ்தரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.