ராஜபக்ஷ குடும்பத்துக்குள் விரிசலா?...வெளியான தகவல்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது அவரது சகோதரர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சில உறவினர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகிறது.
மஹிந்த கண்ணியத்துடன் பதவி விலகாமல் இழுத்தடித்து ராஜபக்ச குடும்பத்தின் மீது கரும்புள்ளியை ஏற்படுத்தியதாக அவர்கள் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.
மே 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தோன்றிய சமல் ராஜபக்ஷ பகிரங்கமாக இந்த விடயத்தை குறிப்பிட்டார். அரசியல் விட்டுக்கொடுப்புகளுக்கு பழகிக் கொள்ள வேண்டும், இல்லையேல் அதிகார வேட்கையில் தனக்கு பிடித்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் பதவி விலகாமல் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக மஹிந்தவின் 50 வருடகால அரசியல் வாழ்க்கை பாழடைந்துள்ளதாகவும் சமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையிலும் அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை.
அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தலைமைத்துவத்தை வழங்குவார் என தெரியவருகிறது.