O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள் ; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குள் வெளிவர வாய்ப்புள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில் குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கடந்த வாரம் முதல் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் வெளியாகி வருகின்றன.
எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதி அல்லது ஜுன் மாத நடுப்பகுதிக்குள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், போலிய செய்திகளினால் பரீட்சார்த்திகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுவதால், அவ்வாறான செய்திகளை பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.