போலி சீட்டிழுப்பு; 10 மில்லியன் மோசடி செய்த இருவர் மட்டக்களப்பில் கைது
போலி சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ. 10 மில்லியன் மோசடி செய்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பணமோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் வடக்கு மாகாணப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நேற்று திங்கட்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

10 மில்லியன் மோசடி
வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டயலொக் மெகா வாசனா அதிஸ்டச் சீட்டிழுப்பில் பரிசுகளைப் பெற்றுள்ளதாகக் கூறி, இணையம் மூலம் மக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபாய் பணமோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வடக்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.