போலி தங்க நகைகளை அடகு வைக்கும் வர்த்தகம் அம்பலம் ; சந்தேகநபர் ஒருவர் கைது
இரத்தினபுரியில் போலி தங்க நகைகளை அடகு மையங்களில் அடகு வைத்து பணம் மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் ரக்வானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைதானவர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து மிக நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட 08 கிராம் எடையுடைய போலி பெண் தங்க மோதிரம் ஒன்றும், பல அடகு மையங்களில் போலி தங்க நகைகளை வழங்கி பணம் பெற்றுக் கொண்டதற்கான சில துண்டு சீட்டுக்களையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த போலி தங்க நகைகளை, சந்தேகநபர் நீர்கொழும்பு - குரன பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரக்வானை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.