பொலிஸ் அதிகாரி தலைமையில் போதைப்பொருட்களுடன் கோலாகலமாக நடைபெற்ற பேஸ்புக் விருந்து
மஹாவெல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பேஸ்புக் விருந்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ஜயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமில் இணைக்கப்பட்ட அதிகாரி மற்றும் சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவில் பணிபுரிபவர் என்பதுடன் மற்ற சந்தேக நபர்கள் மாத்தளை, மஹாவெல, கட்டுகஸ்தொட, கண்டி மற்றும் ரத்தோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து 22 கிராம் கஞ்சா கலந்த மெத்தம்பேட்டமைன், 620 மில்லிகிராம் ஹாஷிஷ் மற்றும் 660 மில்லிகிராம் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.