முகநூல் காதல்; அச்சுறுத்தல் விடுத்த ஹோட்டல் உரிமையாளர்! யுவதியின் விபரீத முடிவு
நீர்கொழும்பில் முகநூல் காதலால் 24 வயதுடைய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
50 வயதுடைய பணக்காரரான ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 24 வயதுடைய பெண்ணை முகநூல் ஊடாக காதலித்துள்ளார்.
நீர்கொழும்பை சேர்ந்த குறித்த பெண் ஹோட்டல் உரிமையாளருடன் நீண்ட காலமாக காதல் தொடர்பில் இருந்துள்ளார்.
அதன்பின்னர் குறித்த பெண் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளர்.
விசாரணையின் போது குறித்த பெண்ணால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் தானும் ஹோட்டல் உரிமையாளரும் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தல் விடுத்தமையினால் மன வருத்தமடைந்து இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் அந்த யுவதி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து 50 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த ஹோட்டல் உரிமையாளர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.