இன்று அதிகாலை இலங்கை கடற்படையிடம் சிக்கிய பெருமளவு ஆபத்தான பொருள்!
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமான சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த 290 கிலோ 200 கிராம் ஹெரோயின் இலங்கையின் தெற்கு கடற்பிரதேசத்தில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த பெருமளவிலான போதைப்பொருள் பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 05 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்திய படகும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இலங்கைப் பெறுமதி 2321 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 தொடக்கம் 37 வயதுடையவர்கள் என்பதோடு, தென்னிலங்கையின் அஹுங்கல்ல, பலப்பிட்டிய ஹபராதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மைக்காலமாக பிடிப்பட்ட பெறுமதியுடைய மற்றும் அதிக அளவிலான போதைப்பொருள் இது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

