எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்....நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பிலான வழக்கில் நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுகம் அருகே கடந்த மே மாதத்தில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலானது தற்போது கரையின் அருகே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினை விடுவிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வந்த இந்த கப்பலில் ஏற்பட்ட தீயின் காரணமாக தென்னிலங்கையின் கடல் வளங்கள் அழிவை சந்தித்தன. இதற்கு நட்ட ஈடாக சுமார் 6 லட்சம் அமெரிக்கா டொலர்களை குறித்த நிறுவனம் வழங்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை முற்றுகையிடும்படி துறைமுகத்தின் மாஸ்டருக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் அடுத்த விசாரணையை 21ஆம் திகதிக்கு ஒத்திவைது உத்தரவிடப்பட்டது.
மேலும் குறித்த வழக்கின் பிரதிவாதிகள் அனைவரும் வழக்கு விசாரணையின்போது ஆஜராக உத்தரவிடப்பட்டது.