காட்சிகளை அழித்த அரசாங்கம்; குற்றம் சுமத்தும் கிரியெல்ல!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தரித்திருந்த இடத்திலிருந்து துறைமுகத்துக்குள் வரும் வரையிலான சி.சி.டிவி காட்சிகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் இலங்கைக்குள் அனுமதியளிக்கப்பட்ட்ச நிலையில் சி.சி.டிவி காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
நீதவான் விசாரணைகளில் இது வெளிப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (30) அமர்வில் கலந்துகொண்டு எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் சபையில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.
அத்துடன் இந்த சி.சி.டிவி காட்சிகள் அழிக்கப்பட்டதால் இக் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் நட்டஈட்டை பெறுவதில் பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, சி.சி.டிவி காட்சிகளை அரசாங்கமே அழித்ததாகவும் கூறினார்.