பாகிஸ்தானின் அதிரடி துடுப்பாட்டம் ; 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 (T20) கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று (11) நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய மாஸ் சதாகட் அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து, 216 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.