காலாவதியான 16,150 ரின் மீன்கள் அழிப்பு
Food Shortages
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Sulokshi
காலாவதியான 16,150 ரின் மீன்கள் குருணாகல் - பன்னல பிரதேச சபையின் உரக் களஞ்சியசாலையில், அழிக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுக்கு தகுதியற்ற ரின் மீன்களின் வர்த்தக நாமம் மற்றும் காலாவதி திகதி மாற்றப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டிருந்த சம்பவம் வெளிச்சத்து வந்திருந்தது.

அத்துடன், பன்னல - முக்கலான பிரதேசத்தில் உள்ள மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் காலாவதியான மற்றுமொரு தொகுதி ரின் மீன்கள் நுகர்வோர் அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட நுகர்வுக்கு தகுதியற்ற ரின் மீன்கள், குளியாப்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய அழிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US