வெளிநாடொன்றில் தமிழருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!
சிங்கப்பூரில் இன்று நாகேந்திரனிற்கு காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் மலேசியாவின் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்ணமயமான டீ சட்டை நீல நிற ஜீன்ஸ் மற்றும் விளையாட்டின்போது அணியும் வெள்ளை நிற காலணியை அணிய வேண்டும் என்ற அவரது கடைசிய ஆசை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அந்த உடையுடன் நாகேந்திரன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சிங்கப்பூர் மனித உரிமை ஆர்வலர் கேர்ஸ்டன் ஹன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஆத்மா சாந்தியடையட்டும் நாகேந்திரன் என்றும் அந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார் மரண தண்டனைக்கு முன்னதாக நாகேந்திரன் அணிந்துகொள்வதற்காக உடைகளை வாங்கிவருவதற்கும் அந்த உடையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கும் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டனர்.
நாகேந்திரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ அந்த புகைப்படங்கள் அவரது குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என இன்று தமது முகநூலில் கேர்ஸ்டன் ஹன் பதிவிட்டிருந்தார்.
நாகேந்திரனுக்கு விருப்பமான உடை இதுதான் என அவரது சகோதரர் நவீன் குமார் தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அடக்கம் செய்வதற்காக நாகேந்திரனின் உடலை ஈப்போவிற்கு கொண்டுச் செல்வதற்கு மலேசியபிரதே வாகன சேவை நிறுவனம் முன்வந்ததாக மனித உரிமை வழக்கறிஞரான ஆ. ரவி தெரிவித்தார்.



