வைத்தியர் அரச்சுனா குறித்து வெளியான பரபரப்பான வீடியோ!
யாழ்ப்பாணம் - சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுகாதார மேம்பாடுகள் தொடர்பான நிகழ்வு இடம்பெற்றபோது வைத்தியர் அர்ச்சுனா அழையா விருந்தாளியாக சென்றதாக பிரபல ஊடகத்தில் வெளியான செய்தியை கேவலமாக விமர்சித்து அர்ச்சுனா மோசமான காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
குறித்த கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான நிகழ்வுக்கு வைத்தியர் அர்ச்சுனா தம்மால் அழைக்கப்படவில்லை என்பதை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் உறுதிசெய்திருந்தார்கள்.
இவ் விடயம் சம்பந்தமாக ஒரு பரபரப்பு காணொளி ஒன்றை IBC-தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ளது.