நகைக்கடைகளில் கொள்ளையிட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள்
கொழும்பு 11 - செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து 1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த ஜுன் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொஸ்கம, ஹங்வெல்ல, தங்கொட்டுவ, மில்லாவ மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் வசிக்கும் 30 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

ஊழியர்களும் உடந்தை
கைதானவர்களில் ஒருவர் மதுவரி திணைக்கள பரிசோதகர் எனவும் ஏனைய நால்வரும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதோடு நகைகடையை சேர்ந்த 7 பேரை கைது செய்திருந்ததுடன், சட்டவிரோத சிகரட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், அதில் 4 பேரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து 50 மில்லியன் ரூபாயை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        