திருகோணமலையில் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி
திருகோணமலையில் தமிழ் ஆயுத போராட்ட அமைப்பினரின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆயுத போராட்ட அமைப்பினரின் ஆயுதங்கள் அவ் இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அவ் இடத்தில் அகழ்வுப் பணி இன்று (14) இடம் பெற்றுள்ளது.
நீதிமன்ற பதில் நீதவான்
மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் தலைமையில் இவ் அகழ்வுப் பணி திருகோணமலை தடயவியல் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப் பகுதியில் சுமார் 12 அடி தோண்டப்பட்ட நிலையில் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் இந்நிலையில் மீண்டும் இயந்திரத்தை கொண்டு கிடங்கை மூடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.