முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிணை ஒத்திவைப்பு?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும், ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிணை மனு தொடர்பான விசாரணை
இந்த பிணை மனு தொடர்பான விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் விசாரணை முழுமையடையாததால், பிரதிவாதியை காவலில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறதாகவும் கூறப்படுகின்றது.
பிணை வழங்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டாலும் அது தொடர்பான நீதிமன்ற இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்ததுடன் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறும் மன்றில் கோரினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி லண்டனுக்கு பயணம் செய்ததாக குற்றப்புலனாய்வு திணைகளத்தால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.