சிறைச்சாலையில் ராஜித சேனாரட்ன மகிழ்ச்சி!
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன மகிழ்ச்சிகரமாக தனது நேரத்தை கடத்துவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைச்சாலையின் N பிரிவில் கைதிகளால், சுவர்களில் எழுதப்பட்டிருந்த கவிதைகளை ராஜித படித்து மகிழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவர்களில் எழுதப்பட்டிருந்த கவிதை
இந்தக் கவிதைகள் தனக்கு சுவாரஸ்யமான நினைவுகளாக இருப்பதாக, சக கைதிகளிடமும் சில சிறை அதிகாரிகளிடமும் ராஜித தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் சிறைக்கே செல்ல வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் உட்பட சுமார் 25 கைதிகள், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் N பிரிவில் ராஜிதவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ராஜித சேனாரத்ன தினமும் செய்தித்தாள்கள் படிப்பதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் தனது நேரத்தை செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் ராஜித சேனாரத்னவை சந்திக்க பலர் சிறைச்சாலைக்கு வந்து சென்றுள்ளனர்.
இதன் காரணமாக அவர் காலை மற்றும் பிற்பகலில் பெரும்பாலான நேரத்தை பார்வையாளர்களுடன் செலவிட்டதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.