சதோச நிறுவன முன்னாள் முகாமையாளர் உட்பட மூவர் கைது!
லங்கா சதோச லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் (நிதி) உட்பட மூன்று நபர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (12) கைது செய்யப்பட்டனர்.
தனியார் நிறுவனத்திற்கு 54,860 கிலோ கிராம் வெங்காயத்தை கிலோ ஒன்றுக்கு ரூ.135க்கு விற்பனை செய்த வழக்கில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல், லங்கா சதோச விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட இந்தப் பரிவர்த்தனை, ஒரு தனியார் தொழிலதிபருக்கு பயனளிக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகவும், நிறுவனத்திற்கு ரூ.17,006,600 இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
கைதான சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.