ஈக்களால் நின்றுபோன நிச்சயதார்த்தம் ; கிராமத்தை காலி செய்யும் மக்கள்! எங்கு தெரியுமா?
ஈக்கள் பிரச்சினையால் அங்குள்ள மக்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வேறு இடத்துக்குச் செல்லும் நிலைக்கு திருச்செங்கோடு அருகே கட்டிபாளையம் கிராமத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு - நாமக்கல் திருச்செங்கோடு அருகே மரப்பரை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டிபாளையம் கிராமத்தைச் சுற்றி 20-க்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன.
நின்றுபோன திருமண நிச்சயதார்த்தம்
இப்பண்ணைகளில் உள்ள கூடாரத்தின் கீழ் கோழிகளின் எச்சம் மலை போல் குவித்து வைக்கப்படும். அவற்றை குறிப்பிட்ட மாதத்திற்கு ஒரு முறை கோழிப் பண்ணையாளர்கள் விற்பனை செய்வர்.
இந்நிலையில் கோழி எச்சத்தில் இருந்து உற்பத்தியாகும் ஈக்கள் கட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொள்கின்றன.
ஈக்கள் உணவுப் பொருட்களின் மீது பொருட்களை மக்கள் பயன்படுத்தும் போது பல்வேறு தொற்று நோய் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோழிப் பண்ணைகளில் இருந்து உற்பத்தியாகும் ஈக்கள் குடியிருப்புகளுக்குள் புகுவதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர்.
இப்பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஈக்களை கட்டுப்படுத்த கோழிப் பண்ணையாளர்கள் மருந்து களை தெளிக்க வேண்டும். அதனை அவர்கள் செய்ய தறியதால் ஈக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குடியிருப்புகளை காலி செய்து செல்லும் அளவுக்கு இப்பிரச்சினை நிலவுகிறது. சமீபத்தில் ஈக்கள் பிரச்சினை காரணமாக திருமண நிச்சயதார்த்தமே ரத்தாகிவிட்டதாக கூறப்படுகின்றது.