வெடுக்குநாறியால் மீண்டும் இனமுரண்பாடு; ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவேனந்தா அவசர கோரிக்கை!
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளையும் நம்பிக்கையீனத்தையும் உருவாக்கும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விடையத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிக கவனம் செலுத்தி தீர்வை கொடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுதியுள்ளார். இது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களிடையே பெரும் அதிர்வலை
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிலப்பரபுக்கள் பௌத்த சமயத்துக்குரியது என்றும் அந்நிலங்களை எல்லையிட்டு விரைவில் வர்த்தமானி அறிவிப்பு செய்யவுள்ளதாகவும் துறைசார் அமைச்சர் பாராளுமன்றில் அறிவித்துள்ளமை தமிழ் மக்களிடையே அது பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.
அமைச்சரின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இனங்களுக்கிடையில் உண்மையை மறைப்பதாகவும் குறிப்பாக வரலாற்றை மறைப்பதாகவும் இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக அமையும்.
முன்பு நாம் ஆட்சியில் இருந்தபோது வர்த்தமானி வெளியிடும் செயற்பாட்டை முன்னெடுக்காத வகையில் கையாண்டு ஒரு சுமூக நிலைக்கு கொண்டுவந்திருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றைய நிலமை அதை முற்றாக மாற்றியமைக்கதாக இருக்கின்றது.
அந்த வகையில் இவ்விடையத்தின் உண்மை நிலையை விளக்கி எவ்வாறான நடவடிக்கை எடுப்பதனூடாக இனங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்ற கருத்தை உள்ளடக்கி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.