வளைகுடா அச்சத்தின் மத்தியில் வானூர்தி சேவைகள் ஆரம்பம்; சிக்கித் தவிக்கும் பயணிகள்!
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டுள்ள நிலையில், இன்று (06) முதல் தமது மட்டுப்படுத்தப்பட்ட வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.
அதன்படி எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஆகிய வானூர்தி நிறுவனங்கள் வானூர்தி சேவைகளை ஆரம்பித்துள்ளன.
ஏர் பிரான்ஸ் மீது ஏவுகணைத் தாக்குதல்
எதிஹாட் ஏர்வேஸ் மார்ச் 19 வரை லண்டன், பாரிஸ், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட 70 நகரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வானூர்திகளை இயக்கும் என்பதோடு எமிரேட்ஸ் நிறுவனம் 82 இடங்களுக்கான சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் ஆரம்பமான பெப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை திட்டமிடப்பட்டிருந்த 44,000 வானூர்திகளில் , சுமார் 25,000 வானூர்திகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரெஞ்சு நாட்டவரை ஏற்றிச் செல்ல வந்த 'ஏர் பிரான்ஸ்' வானூர்தி , ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நேற்று (5) பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டது.
தற்போது டுபாய் வானூர்தி நிலையத்தின் போக்குவரத்து இயல்பு நிலையை விட 25% மட்டுமே காணப்படுவதுடன், கட்டார் வானூர்தி நிலையத்தின் சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கிருந்து ஓமான் மற்றும் சவுதி ஊடாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது