பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து திடீரென கிழே விழுந்த கதவு; அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
அமெரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து திடீரென அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரில் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.
நடுவானில் சென்று கொண்டிருந்தபோது சம்பவம்
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.
இதுபற்றி விமானிக்கு தகவல் சென்றதை அடுத்து உடனடியாக விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பியது. இந்த சம்பவம் நடந்தபோது, விமானம் புறப்பட்டு பறந்து சென்று, 33 நிமிடங்கள் வரை ஆகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் விமான பயணி ஒருவர் கூறுகையில், விமானத்தில் இருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. இதனால், விமானி அறையில் இருந்து அடுத்து, வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியவில்லை.
இந்த சம்பவம் எதிரொலியாக, பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம் என்று கூறினார் .
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளது.