அவசரகால விதிமுறையை பிரகடனப்படுத்த முடியாது!
நாட்டில் அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள என்ற தோரணையில் தற்போது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
இதனை கடுமையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அவசரகால நிலைமை நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உணவு விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சட்டத்தின் கீழ் நாட்டுக்கு ஆபத்து காணப்பட்டால், பாதுகாப்பிற்கு ஆபத்து காணப்பட்டால் அதனோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கே இந்த சட்டத்தை பாவிக்க முடியும்.
இதனால் தான் பொது மக்கள் பொது சுகாதார அவசரகால நிலைமைக்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தோம் என்றார்.