எல்ல- வெல்லவாய கோர விபத்து தொடர்பில் வெளியான புதிய தகவல்
பதுளை எல்ல- வெல்லவாய பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் காயமடைந்து பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என பதுளை போதனா மருத்துவமனையின் மருத்துவர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி, காயமடைந்தவர்களில் கவலைகிடமான நிலையில் இருந்தவர்கள் தற்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவசர அறுவை சிகிச்சைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சிறுவர்களின் நிலைமை நன்றாக உள்ளதுடன், அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.