எல்ல பேருந்து விபத்து; காயமடைந்த பயணி வெளியிட்ட பகீர் தகவல்!
நேற்று இரவு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று எல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த பயணி ஒருவர் பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து இடம்பெற்றதாக கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
பிரேக் பிடிக்குது இல்லை
பேருந்து வளைவில் செல்லும் போது சாரதி பிரேக் பிடிக்குது இல்லை என்றார் . நடத்துனரும் மற்றவர்களும் சிரித்தபடி பொய் சொல்கிறார என்றார்கள். அடுத்த வளைவில் செல்லும் போது தான் பொய் சொல்லவில்லை. உண்மையை சொல்கிறேன் என்றார்.
திடீரென்று பேருந்தை நிறுத்த தொடங்கிய போது எனக்கு உண்மையில் பிரச்சினை இருப்பது தெரிந்தது. நான் இன்ஜின்பகுதி மேல் இருந்தேன் நான் அப்போதே முடிந்துவிட்டேன் என நினைத்தேன்.
நான் சுயநினைவு பெற்று கண்களைத் திறந்தபோது நான் உயிருடன் இருக்கிறேன் என எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் ஊடகங்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.