புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன் தீப்பந்தப் போராட்ட ஈடுபட்ட மக்கள்!
நாட்டில் மின்சாரக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு எதிராக புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை மக்கள் இன்றைய தினம் (28-02-2023) மாலை முன்னெடுத்துள்ளனர்.
தீப்பந்தப் போராட்டத்தை தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்ததுடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மின்சாரக் கட்டண அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'மக்களுக்கு அத்தியாவசிய சேவை விலைகளை அநீதியான முறையில் உயர்த்தியமையை கண்டிக்கிறோம், மின்சார பில் விண்ணில் மக்களோ கடும் இருட்டில், உடனடியாக மின்சாரக் கட்டணத்தை குறை, மின்சார பில் வரும் முன்னே விலை அதிகரிக்கும் பின்னே' ஆகிய வசனங்கள் பதாதைகளில் எழுதப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.