இலங்கையில் பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகள்! வெளியான அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Election
Sri Lanka Presidential Election 2024
By Shankar
இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று (15-08-2024) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அனைத்து தேர்தல் விதிமுறைகளும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளது.
- பாரபட்சம் ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்பதுடன், ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு வாரம் வரை ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.
- இதுபோன்ற தேர்தல் வன்முறைகளை தடுக்க பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- ஒலிபெருக்கிகளை பயன்படுத்த பொலிஸ் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.
- வாக்குகளைப் பெறுவதற்கு இலஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அரசு நிறுவனங்களையும், அரசு அதிகாரிகளையும் தவறாக பயன்படுத்தக் கூடாது.
- வேட்பாளர்களுக்கு சமமான ஊடக பிரபல்யங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளித்து செயல்படக் கூடாது.
- சமூக வலையதளங்கள் இம்முறை தீவிரமாக கண்காணிக்கப்படும்.
- சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US