பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு
காலி - கொழும்பு பிரதான வீதியில் பலப்பிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஆவார்.
மூதாட்டி, பஸ் தரிப்பிடத்திலிருந்து புறப்படவிருந்த பஸ் ஒன்றில் ஏற முயன்ற போது அதே பஸ்ஸில் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து ஏற்படுத்திய பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.