கிளிநொச்சிக்கு அமைச்சர் அநுர கருணாதிலக விஜயம்
கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நகர அபிவிருத்தி,நிர்மாணத்துறை, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைசசர் ரி.பி சரத் ஆகியோரின் விஜயம் நேற்று (17) இடம்பெற்றது.
இதன் போது, உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் நீர் வழங்கல் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் (WaSSIP கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும், அதன் செயற்பாடுகளையும் அமைச்சர், பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன், மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர், உதவி பொது முகாமையாளர், பொறியியலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.