காதலை எதிர்த்த தந்தைக்கு மூத்த மகன் செய்த பெரும் கொடூரம் ; இலங்கையில் அரங்கேறிய பயங்கரம்
மொனராகலை, பிபிலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் 25 வயதுடைய அவரின் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனை
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மகன், யுவதி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலுக்குத் தந்தை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.
இந்தக் காதல் விவகாரம் தொடர்பில் நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தந்தையை மகன் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
மகனைக் கைது செய்துள்ள பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.