எல் நினோ தாக்கம் ; அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
கடந்த சில மாதங்களாக நாட்டின் வானிலையில் எல் நினோ நிகழ்வு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியதனால், முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவி வரும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இந்த ஆண்டு டிசம்பர் மாத நடுப்பகுதி வரை தொடரக்கூடும்.

அதன் பின்னர் மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறையத் தொடங்கும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் ஆரம்பத்துடன் எல் நினோ தாக்கத்தின் தன்மை மாறும் எனத் தெரிவித்துள்ள மாலித் பெர்னாண்டோ, 2027 ஜனவரி மாத ஆரம்பம் முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறையும்.
இது எல் நினோ நிகழ்வின் பொதுவான பண்பு. தற்போதைய வானிலை எதிர்வுகூறல்களின்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை எல் நினோ நிலைமை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இந்தக் காலப்பகுதி முழுவதும் நாட்டில் மழைவீழ்ச்சி குறைவாகவே காணப்படும் எனத் தெரிவித்துள்ளார்.