வனப்பகுதியில் உல்லாசமாக இருந்த எட்டு பேர் அதிரடியாக கைது
ஹட்டனில் நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், வனப்பகுதியில் உல்லாசமாக உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம், காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்குச் செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து கைது செய்து உள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில் 25 வயது தொடக்கும் 30 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் உட்பட 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்களுமே கை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வனப்பகுதியில் உல்லாசமாக இருப்பதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.