யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் காணப்படும் அவல நிலை! புகைப்படங்கள்
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய மலசலகூடத்தில் இருந்து கழிவு நீர் அங்குள்ள வாய்காலில் நிறைந்து நிற்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரசபைக்கு ஐந்து நாட்களாக இது தொடர்பாக முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.
மேலும், குறித்த மலசல கூட நீரை, காலை 7 மணிக்கும் 11 மணிக்கும் பொதுமக்கள், பயணிகள் கூடி நிற்கும் வேளைகளில் கழிவு வாகனத்தில் அகற்றுவதால் கடும் துர்நாற்றம் ஏற்படுவதாகவும் அருகில் உள்ள உணவகங்களில் உணவு அருந்துபவர்கள் மற்றும் உணவுகளில் குறித்த துர்நாற்றம் பரவுவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதேவேளை, மாநகர சுகாதாரத்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா? எனவும் பயணிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் மிகக் குறுகியதாகக் காணப்படுவதாகவும் இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முறையிட்டு அவர் வந்து பார்த்ததாகவும் தெரியவருகின்றது.
அமைச்சர் டக்ளஸ் மாநகரசபை அதிகாரிகளுக்கு உடனடியாக குறித்த வாய்க்காலை அகலப்படுத்துமாறு கூறியும் அந்த நடவடிக்கை பல மாதங்களாக எடுக்கபடவில்லை எனவும் பேருந்து நிலையத் தரப்புக்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.