நாளை கனடாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞர்
கனடாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் நாளைய தினம் நாடுகடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்சிகன் புனிதராசா என்பவரையே கனேடிய அரசாங்கம் நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் தனது அகதி அந்தஸ்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடுகடத்தல் உத்தரவுக்கு முகங்கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் நாளைய தினம் நாடுகடத்தப்படவுள்ளதாக கனடா எல்லைச் சேவைகள் நிறுவனம் (CBSA) இன்று அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடுகடத்தப்படுவதற்கு இன்னும் ஆறு மணித்தியாலங்களே எஞ்சியிருந்த நிலையில் இந்த அறிவித்தல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், நாடுகடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
