நச்சுத் தூசி தாக்கத்தால் 15 மாணவர்களுக்கு ஒவ்வாமை
நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்யாலயத்தில் நச்சுத் தூசி தாக்கத்தால் 15 மாணவர்கள் ஒவ்வாமைக்கு உள்ளாகி, டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (05) பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தரம் 7இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பறைக்குக் கொண்டுவந்த நாரிழைப் (Fiber) பொருளாலான உபகரணத்தைத் திறந்தபோது, அதிலிருந்து வெளியான தூசியால் 9 மாணவர்களும் 6 மாணவிகளும் ஒவ்வாமை மற்றும் அரிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 15 மாணவர்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர், நோட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் வலையக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.