முதல் நாளே பிக்பாஸிடம் புலம்பிய ஈழப் பெண் ஜனனி!(Video)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிலையில் கிராண்ட் ஓப்னிங் இடம்பெற்றது.
இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி இருக்கிறார்கள்.
இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இடம்பெறும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 முக்கிய நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
#Janany ??#BiggBossTamil #Biggboss #BiggBossTamil6 #JananyArmy pic.twitter.com/2iz6zBU1K6
— Bigg Boss Tamil ➐ (@BigBossTamil_S6) October 10, 2022
இவ்வாறு இருக்கையில் அக்டோபர் 9-ஆம் தேதி மாலை முதல் விஜய் டிவியிலும் டிஸ்னி + ஹாட் ஸ்டாரிலும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், வீட்டுக்குள் வந்த முதல் நாளே, பிக்பாஸ் கேமரா முன், “பிக்பாஸ் எனக்கு என் சோப்பு, face wash, தோடு, லிப் ஸ்டிக், லைனர், மஸ்காரா எல்லாமே வேணும்.
நீங்க அதை தரவில்லை என்றால் நான் டிரஸ்ஸை மாற்ற மாட்டேன். என் தலையை சீவ முடியாமல் உள்ளேன். என் சீப்பை தாருங்கள். என் மோதிரங்களை தாருங்கள். நான் ஒவ்வொரு டிரஸ்க்கும் ஒவ்வொரு மோதிரம் போடுவேன்” என புலம்பி தவித்துள்ளார்.
மேலும் இதை பார்த்த ரசிகர்கள், என்னப்பா இது, இந்த பொண்ணு முதல் நாளே இத்தனை கோரிக்கைகளை, புலம்பல்களாக முன்வைக்கிறார் என்று பேசி வருகிறார்கள்.