இலங்கை நிலமை குறித்து பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் கட்ட முடியாது என இலங்கை அறிவித்துள்ள நிலையில் நாடு திவாலான நிலைமையை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படிக் கடன் தவணை தவறுவது, திவாலான 'ஒரு நாடு ' என பொருள் படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதியை பதவி விபகுமாறு கோரி மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது இலங்கை. விலைவாசி உயர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.
நாணயத்தின் மதிப்பு கடுமையாகச் சரிந்திருக்கிறது. அமெரிக்க டாலர்களில் நடக்கும் இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் திணறிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய சூழலில் கடனைக் கட்ட இயலாது என அரசு அறிவித்திருப்பதால் சிக்கல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற எதிபார்ப்பு பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.