இலங்கையில் அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மற்றுமொரு துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு!
இலங்கைக்கு டொலர்கள் தேவைப்படும் நேரத்தில், நாட்டுக்கு டொலரைக் கொண்டு வரும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான ஏற்றுமதித் துறை, தற்போது வரலாறு காணாத அழுத்தத்தில் சிக்கியுள்ளது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக ஏற்றுமதிக் கொள்கலன்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேல் மாகாணத்தில் மட்டுமே கொள்கலன் போக்குவரத்து மேற்கொள்ளப் படுகிறது. அதுவும் 10 வீதமாக குறைக்கப்பட் டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் வாகனங்கள் ஒன்றிணைந்த மன்றத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.
போக்குவரத்து இல்லாத காரணத்தால் முதலீட்டு வலயங்களில் ஏராளமான ஏற்றுமதிகள் ஏற்கனவே குவிந்துள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் 6,000 கொள்கலன் லொறிகள் உள்ளன.
இதில் தினமும் 800 முதல் 1,200 லொறிகள் ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் 1,800 முதல் 2,400 கொள்கலன் லொறிகள் இறக்குமதி பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.