இந்தியாவிலும் புகுந்த எபோலா வைரஸ்; தனிமைப்படுத்தப்பட்ட பெண்
இரண்டாம் இணைப்பு
இந்தியாவில் எபோலா தொற்று உறுதி செய்யப்படவில்லை
எபோலா பரிசோதனை முடிவு எதிர்மறை பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்ணின் எபோலா பரிசோதனை முடிவு எதிர்மறையாக (Negative) வந்துள்ளது.
இதனால் இந்தியாவில் எபோலா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என இந்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 28 வயதுடைய அந்தப் பெண்ணின் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு எபோலா நோயை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ள நிலையில், இந்தியா விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு தெற்காசிய நாடொன்றில் பதிவாகும் முதல் எபோலா நோயாளி இவராவார்.

28 வயதான இந்த உகாண்டா நாட்டுப் பெண்
உலக சுகாதார அமைப்பினால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த நோய், இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் அறிவித்த அடுத்த நாளே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
28 வயதான இந்த உகாண்டா நாட்டுப் பெண், உடலில் லேசான வலி இருப்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், அவரது ஆரோக்கிய நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை. கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இந்த பெண், அகமதாபாத்திலிருந்து பெங்களூரு நகரத்திற்குப் பயணம் செய்துள்ளார்.
விமான நிலையங்கள் மற்றும் நுழைவு வாயில்களில் இந்தியா சோதனைகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதுடன், பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியா தனது குடிமக்களை ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது.