இறைச்சிகள் அதிகமாகா எடுத்து கொள்வதனால் ஆபத்தா
இறைச்சிகள் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். இருப்பினும் பல மருத்துவ வல்லுநர்கள் சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகமாக சாப்பிட்டால் அதைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
குறிப்பாக சில இறைச்சிகளில் கொழுப்பு ஏராளமாக உள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.
இதய நோய் அபாயம்
அதிக கொழுப்பைக் கொண்டிருப்பது கரோனரி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
சிவப்பு இறைச்சி எலும்புகளுக்கு ஆரோக்கியமானது என்றாலும் அதை அதிகமாக சாப்பிடுவது உண்மையில் எலும்புகளை சேதப்படுத்தும் என கூறப்படுகிறது.
ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து
ஊட்டச்சத்து நிபுணர்,"உங்கள் உணவில் பால், மீன், கோழி மற்றும் தாவர அடிப்படையிலான புரதச் சத்துக்களை சேர்த்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களுடன் சமப்படுத்தி உண்ண மறக்காதீர்கள்" என்கிறார்.
பதப்படுத்தப்பட்ட அல்லது சிவப்பு இறைச்சியின் பக்கவிளைவுகளால் உங்கள் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் பகிர்ந்துகொள்கிறார்.
மூன்று பக்க விளைவுகள்
அதிக புரத உணவு குறிப்பாக இறைச்சிகளில் இருந்து வரும் புரதம், கால்சியம் இழப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இறைச்சியில் அதிக பாஸ்பரஸ் கால்சியம் விகிதம் உள்ளது இது கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. எலும்பு கனிமயமாக்கலை ஏற்படுத்தும்.
சிவப்பு இறைச்சி, இரத்தத்தை அமிலமாக்குகிறது மற்றும் எலும்புகளில் இருந்து கால்சியம் அகற்றப்படும்.
பீன்ஸ், பருப்பு, காய்கறிகள் மற்றும் சத்தான தானியங்கள் ஆகியவை இறைச்சி இல்லாத உணவின் அடித்தளத்தை உருவாக்குகின்றன.
பல ஆரோக்கிய நன்மைகள் தாவர அடிப்படையிலான புரதங்களுடன் வருகின்றன. தாவர அடிப்படையிலான புரதங்களை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் உங்களின் பணமும் சேமிப்படையும்.
ஏனெனில் அவை இறைச்சியை விட விலை குறைவாக இருக்கும். சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், குளிர்பானங்கள், வறுத்த உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைப்பது எலும்பு ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.